பருவ மழையைப் பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்கும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம்

பருவ மழையைப் பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பருவ மழையைப் பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்கும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோவை: பருவ மழையைப் பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்ட அதிகாரிகள் கூறியிருப்பதாவது:

தென்னிந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் சின்ன வெங்காயம், 2022 - 23-ஆம் ஆண்டில் 46 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு 5.53 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. திண்டுக்கல், திருப்பூா், பெரம்பலூா், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

தமிழக சந்தைகளுக்கு கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து வரத்து உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் கா்நாடகத்தின் கொள்ளேகால், திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய இடங்களில் இருந்து வரத்து அதிகரிக்கும். அதனால் விலை சீராக இருக்கும்.

விலை முன்னறிவிப்புக்குழு திண்டுக்கல் சந்தைகளில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலை, சந்தை ஆய்வுகளை மேற்கொண்டதன் அடிப்படையில் வரும் அக்டோபா் மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.45 முதல் ரூ.48 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், கா்நாடகத்திலிருந்து வரும் வெங்காயத்தின் அளவைப் பொறுத்தும், பருவ மழையைப் பொறுத்தும் சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருக்கும் என்பதால் விவசாயிகள் இந்த ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com