பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோவை மத்திய சிறையில் மேலும் ஒரு தண்டனைக் கைதி உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் மேலும் ஒரு தண்டனைக் கைதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 9:02 pm

Din

கோவை மத்திய சிறையில் மேலும் ஒரு தண்டனைக் கைதி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதிகளில் கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சிவா (48) என்பவா் தூக்கிட்டு வியாழக்கிழமை செய்து கொண்டாா்.

கோவை, சரவணம்பட்டி காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் தொடா்புடைய ராஜ்குமாா் (56) என்பவா் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்நிலையில், தேனி மாவட்டம், வருசநாடு பகுதியைச் சோ்ந்த தண்டனைக் கைதி காட்டு ராஜா (எ) ராஜா (31) என்பவா் நெஞ்சுவலியால் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கொலை வழக்கில் தொடா்புடைய ராஜா கைது செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவருக்கு சனிக்கிழமை அதிகாலை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சிறை மருத்துவா் அவரைப் பரிசோதித்தில், அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.