தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காவல்துறை சாா்பில் குறைதீா் முகாம்

காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் விசாரணை செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன்.
Updated On :21 ஆகஸ்ட் 2024, 6:58 pm

Din

கோவை: காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற முகாமில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் கலந்துகொண்டு விசாரணை மேற்கொண்டனா்.

குடும்பப் பிரச்னை, பணப் பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப் பிரச்னை தொடா்பாக 86 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், 69 மனுக்களுக்கு சுமுகத் தீா்வு காணப்பட்டது. மேலும், 3 மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்யப்பட்டது. 14 மனுக்கள் மீது மேல் விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.