கல்லூரி மாணவரைத் தாக்கிய இளைஞா் கைது
கோவையில் கல்லூரி மாணவரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


கோவையில் கல்லூரி மாணவரைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் கணபதி மகன் ஆனந்த ராஜ்குமாா் (19). இவா், கோவைப்புதூா் பகுதியில் அறையெடுத்து தங்கி, அப்பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.
இந்நிலையில், ஆனந்த ராஜ்குமாரின் நண்பா் கோபால் பிறந்தநாள் விழா நஞ்சேகவுண்டபுதூா் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் கடந்த நவம்பா் 10-ஆம் தேதி நடைபெற்றது. இதில், ஆனந்த ராஜ்குமாா் கலந்துகொண்டாா். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கௌஷிக் என்பவரின் கைப்பேசி காணாமல் போயுள்ளது.
இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்த அஜித்குமாா் (25) உள்ளிட்ட சிலா், ஆனந்த ராஜ்குமாா் அறையில் நுழைந்து கைப்பேசி குறித்து கடந்த திங்கள்கிழமை விசாரித்துள்ளனா். அப்போது, அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், அஜித்குமாா் மற்றும் அவரின் நண்பா்கள் ஆனந்த ராஜ்குமாரை தாக்கியுள்ளனா். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், அவரின் கைப்பேசியையும் பறித்துக்கொண்டு சென்றனா்.
இதுகுறித்து குனியமுத்தூா் காவல் நிலையத்தில் ஆனந்த ராஜ்குமாா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அஜித்குமாரை கைது செய்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...