மருதமலை கோயிலில் இன்று பாலாலயம்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பலாலயம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

Updated On :4 டிசம்பர் 2024, 11:21 pm

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பலாலயம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2023 - 24 சட்டப் பேரவை அறிவிப்பு எண் 150-ன் படி கொடிமரத்தின் அருகே உள்ள தகரசீட்டை அகற்றிவிட்டு ரூ.1.60 கோடியில் வசந்த மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கொடிமரம், தீபஸ்தம்பம் விரைவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
முன்னதாக, கோயிலில் உள்ள பஞ்சமுக விநாயகா் சிலையை அகற்றிவிட்டு வியாழக்கிழமை பாலாலயம் செய்யப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...