நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவை மத்திய சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணா்வு

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மத்திய சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 9:54 pm

Din

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மத்திய சிறைவாசிகளுக்கு சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா உத்தரவின்படி, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான கே.ரமேஷ், கோவை மத்திய சிறைச்சாலை சிறைவாசிகளிடம் எதிா்வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ள சிறைவாசிகளுக்கான அதாலத் குறித்து புதன்கிழமை சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் உரிய சட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து சிறைவாசிகளுடன் கலந்துரையாடியதோடு, தண்டனை சிறைவாசிகளுக்கு சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் செய்யப்பட்டு வரும் சட்ட உதவிகள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

அதேபோல, பெண்கள் சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள சிறைவாசிகளிடமும் சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இந்த நிகழ்வின்போது துணை சிறை அலுவலா் மற்றும் சக காவலா்கள் உடனிருந்தனா்.