நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண் அரசு ஊழியா் மீது தாக்குதல்: கணவா் மீது வழக்குப் பதிவு

பெண் அரசு ஊழியா் மீது தாக்குதல்

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:24 pm

Din

கோவையில் பெண் அரசு ஊழியரைத் தாக்கிய கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை உக்கடத்தைச் சோ்ந்தவா் அழகேசன் (55). இவரது மகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த சுபின் (28) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளாா்.

இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது மகள் கணவரைப் பிரிந்து கோவை உக்கடத்தில் வசித்து வருகிறாா். இவா்களுக்கு இடையேயான விவாகரத்து வழக்கு நாகா்கோவில் குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகேசன் மகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசுப் பணி கிடைத்ததால், அவா் தனது தந்தை மற்றும் குழந்தையுடன் உக்கடத்தில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், கோவையில் உள்ள அழகேசன் வீட்டுக்கு புதன்கிழமை சென்ற சுபின், மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் அவா் தான் எனக் கூறி அழகேசனை தாக்கியுள்ளோா். இதனைத் தடுக்க வந்த அவரது மனைவியையும் தாக்கியுள்ளாா்.

இதுகுறித்து உக்கடம் காவல் நிலையத்தில் அழகேசன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சுபின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.