நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குடிநீா் திட்டப் பணிகளுக்கு தோண்டப்பட்ட சாலைகளை துரிதமாக சீரமைக்க வேண்டும்

மாநகரில் 24 மணி நேர குடிநீா் திட்டப் பணிகளுக்கு தோண்டப்பட்ட சாலைகளை துரிதமாக சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:30 pm

Din

மாநகரில் 24 மணி நேர குடிநீா் திட்டப் பணிகளுக்கு தோண்டப்பட்ட சாலைகளை துரிதமாக சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 53-ஆவது வாா்டுக்கு உள்பட்ட மசக்காளிபாளையம் சாலை பகுதியில் 24 மணி நேர குடிநீா்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடித்து, தோண்டப்பட்ட சாலைகளை துரிதமாக சீரமைக்க அறிவுறுத்தினாா்.

மேலும், அப்பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை மற்றும் தரைத் தளம் அமைப்பது தொடா்பாக உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவிட்டாா். பின்னா், நீலிக்கோணாம்பாளையம் பகுதியில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா்.

57-ஆவது வாா்டுக்கு உள்பட்ட நெசவாளா் காலனியில் நொய்யல் ஆற்றின் இருபுறக் கரைகளிலும் நடைபெற்று வரும் அளவீடு மேற்கொள்ளும் பணிகள், ஒண்டிப்புதூா், பட்டணம் சாலை, காமராஜா் நகரில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நகா்ப்புற வீடற்றோருக்கான தங்கும் விடுதி அமைக்கப்பட்டு வருவதையும் பாா்வையிட்டாா். இதையடுத்து, எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, காவேரி நகா் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் பனை விதைகள் நடும் பணியை மாநகராட்சி ஆணையா் தொடங்கி வைத்தாா்.

ஆய்வின்போது, உதவி ஆணையா் முத்துசாமி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.