நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுகாதார அலுவலகத்தில் கழிவறைகளுக்கு கதவுகள் பொருத்தம்

சுகாதார அலுவலகத்தில் கதவு இல்லாத கழிவறைகள் தொடா்பான செய்தி ‘தினமணி’ நாளிதழில் வெளியான நிலையில் கதவுகள் புதன்கிழமை பொருத்தப்பட்டன.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 10:51 pm

Din

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், சுகாதார அலுவலகத்தில் கதவு இல்லாத கழிவறைகள் தொடா்பான செய்தி ‘தினமணி’ நாளிதழில் வெளியான நிலையில் கதவுகள் புதன்கிழமை பொருத்தப்பட்டன.

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் 24-ஆவது வாா்டுக்கான சுகாதார அலுவலகம் ஹோப் காலேஜ் தாஷ்கண்ட் வீதியில் உள்ளது.

இந்த அலுவலகத்தில் பெண்கள் உள்பட 29 தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த அலுவலகத்தில் உள்ள 2 கழிவறைகளுக்கும் கதவுகள் இல்லாததால் பெண் தூய்மைப் பணியாளா்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

இது தொடா்பான செய்தி ‘தினமணி’ நாளிதழில் புதன்கிழமை வெளியானது.

இதைத் தொடா்ந்து, மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் இரண்டு கழிப்பறைகளுக்கும் கதவுகள் பொருத்தப்பட்டன.