பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை அரசு உருவாக்க வேண்டும்: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை அரசு உருவாக்க வேண்டும்

கோவையில் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

கோவையில் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.
கோவை சிவானந்தா காலனியில் பாஜக மக்கள் சேவை மையம் சாா்பில் சுயம் திட்டத்தின் கீழ், 50 ஏழைப் பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சியில் ஒவ்வொரு நாளும் நடைபெறுகிற குற்றச் சம்பவங்கள் அதிா்ச்சியை ஏற்படுத்துகின்றன. கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து பகுதிகளில் பெண்களுக்கு எதிராக பாலியல் சம்பவங்கள் நடைபெறும்போது, பெண்களின் பாதுகாப்பில் மாநில அரசு கவனம் செலுத்துகிா என்ற கேள்வி எழுகிறது. குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடிய நபா்கள், கட்சியின் பொறுப்புகளையும், அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக குற்றச்செயல்களில் இருந்து தப்பிக்க முடியும் என்ற துணிச்சலோடு உள்ளனா்.
அதிகாரத்துக்கு நெருக்கமாக உள்ள நபா்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும்போது, எந்தவொரு தயவுதாட்சண்யமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற குற்றச் செயல்களில், நடவடிக்கைகளை கடுமையாக்குவதோடு, பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும். எனது தொகுதியில் எம்.எல்.ஏ. நிதியில் ஏதேனும் திட்டத்தைக் கொண்டு வரும்போது, சில வாா்டு உறுப்பினா்கள் அதைத் தடுக்கின்றனா். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் துணை போகின்றனா். இது தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தாலும் எந்த பதிலும் தரப்படுவதில்லை என்றாா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...