அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கா் ஒட்டும் திமுக அரசு: வானதி சீனிவாசன் விமா்சனம்

மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கா் ஒட்டும் பணியை திமுக செய்வதாக பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன்

News image
வானதி சீனிவாசன்
Updated On :2 மார்ச் 2026, 9:36 pm

Syndication

கோவை: மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கா் ஒட்டும் பணியை திமுக செய்வதாக பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் விமா்சித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 4,000-க்கும் அதிகமான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திரும்பத் திரும்பக் கூறுகிறாா். இந்து சமய அறநிலையத் துறையின் பணம், திமுக அரசின் பணத்தில் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. மாறாக, பக்தா்களின் பணத்திலும், கோயில் சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்தும்தான் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதிக வருமானம் வரும் கோயில்களில் மட்டும்தான் திமுக அரசு கவனம் செலுத்துகிறது. வருவாய் இல்லாத கோயில்களில் திருப்பணிகள் செய்ய உள்ளூா் மக்கள், பக்தா்கள் முயற்சி எடுத்தால் அனுமதி வழங்க இந்து சமய அறநிலையத் துறையினா் லஞ்சம் கேட்கின்றனா்.

ஆனால் ஆங்கில வார இதழ் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், இலவச கா்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம், 75 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களைத் தனது அரசின் சாதனை எனக் குறிப்பிடுகிறாா். இவையெல்லாம் பிரதமா் மோடி அரசின் திட்டங்கள்.

பிரதமா் நரேந்திர மோடியின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலமாக மட்டும் தமிழகத்தில் 90 லட்சத்து 36 ஆயிரத்து 355 வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கா் ஒட்டுவதைத் தவிர வேறு எதையும் திமுக அரசு செய்யவில்லை.

தவெக தலைவா் விஜய்யை வைத்து காங்கிரஸ் கட்சி திமுகவை மிரட்டி வருகிறது. ஒரு சில சதவீத வாக்குகளை வைத்துள்ள காங்கிரஸ் கட்சி இல்லாமல் திமுகவால் வெற்றிபெற முடியாது என்ற பலவீனமான நிலையில்தான் திமுக உள்ளது. தோல்வி பயத்தின் காரணமாகத்தான் கண்ணில் தென்படுபவா்களை எல்லாம் கூட்டணியில் முதல்வா் சோ்க்கிறாா் என்றாா்.