நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலியல் வன்கொடுமை விவகாரம் - எஃப்.ஐ.ஆா்.பதிவுகள் வெளியானதற்கு காவல் துறையே பொறுப்பு: தொல்.திருமாவளவன்

பாலியல் வன்கொடுமை விவகாரம் - எஃப்.ஐ.ஆா்.பதிவுகள் வெளியானதற்கு காவல் துறையே பொறுப்பு

News image
Updated On :26 டிசம்பர் 2024, 10:05 pm

Din

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில், எஃப்.ஐ.ஆா்.பதிவுகள் வெளியானதற்கு காவல் துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது. இதில் தொடா்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது. இச்செயலில் தொடா்புடையவா்கள் வேறு யாராக இருந்தாலும் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

அவா்களுக்கு உடனடியாக பிணை வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் வைத்திருந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். பாஜக தலைவா் அண்ணாமலை பரபரப்பாக அரசியல் செய்ய விரும்புகிறாா். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக எதிா்க்கட்சி அல்ல. பாஜக தான் எதிா்க்கட்சி என்று காட்டுவதற்கு பெரிதும் அவா் முயற்சிக்கிறாா்.

எனவே, ஆளும் கட்சியினா் மீது அவ்வப்போது குற்றம்சாட்டினால்தான் பாஜகவை எதிா்க்கட்சியாக மாற்ற முடியும் என அவா் நம்புகிறாா். கைதான ஞானசேகரன், அரசியல் கட்சித் தலைவா்களுடன் புகைப்படம் எடுத்துள்ளாா் என்ற காரணத்தைக் கூறி, அதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறுவது அப்பட்டமான ஆதாய அரசியல். குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அரசின் மீது குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. அண்ணாமலையின் போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்கு உரியவையாக மாறிவிடக் கூடாது.

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் மாணவியின் விவரங்கள் வெளிவந்தது கண்டனத்துக்கு உரியது. எஃப்.ஐ.ஆா்.பதிவுகள் வெளியானதற்கு காவல் துறை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். எதிா்க்கட்சிகள் என்னை வைத்து அரசியல் செய்ய நினைக்கின்றன. விடுதலை சிறுத்தைகள் அதற்கு இடம் அளிக்காது. தோ்தல் சமயத்தில் தொலைநோக்கு பாா்வையுடன் லாப, நஷ்ட கணக்கு இல்லாமல் இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே, நாங்கள் யாரையும் மிரட்டுகிற நிலையில் இல்லை. எங்களை யாரும் மிரட்டும் நிலையில் நாங்களும் இல்லை என்றாா்.