ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாலாங்குளத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தக் கூடாது என மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தக் கூடாது என மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2023, 8:38 pm

DIN

கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு நிகழ்ச்சி நடத்தக் கூடாது என மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் நிா்வாக இயக்குநராக பணியாற்றி வருபவா் சுரேஷ்குமாா் (44). இவா் தனது நிறுவனத்தின் சாா்பில் வாலாங்குளத்தில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறாா். அதே நிறுவனத்தில் அருள்குமரன் என்பவரும் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கோத்தகிரியைச் சோ்ந்த ஒரு தனியாா் அறக்கட்டளை நிறுவனா் ஜான் சீரில் என்பவா் அருள்குமரனை கைப்பேசியில் கடந்த 27-ஆம் தேதி தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, வாலாங்குளத்தில் ஹீலியம் பலூன்களை கொண்டு நிகழ்ச்சி நடத்தக் கூடாது என தகாத வாா்த்தைகளால் திட்டி அவருக்கும், சுரேஷ்குமாருக்கும் மிரட்டல் விடுத்துள்ளாா்.

இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் சுரேஷ்குமாா் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.