தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தேவாலயங்கள் மற்றும் கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு வழிபாடு:ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள், கோயில்களில் நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.

News image

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயில்களில்  நடைபெற்ற வழிபாட்டின் போது சிறப்பு  அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  அருள்பாலித்த புலியகுளம் முந்தி விநாயகா், ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த காட்டூா் காளி

Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள், கோயில்களில் நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.

கோவையில் ஆங்கிலப் புத்தாண்டு திங்கள்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட து. இதன் ஒருபகுதியாக கிறித்தவ தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை மற்றும் சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. புனித மைக்கேல் பேராலயத்தில் கோவை மறைமாவட்ட ஆயா் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத் திருப்பலி நிகழ்வில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

புலியகுளம் புனித அந்தோணியாா் திருத்தலம், ராமநாதபுரம் புனித செபஸ்தியாா் தேவாலயம், காட்டூா் கிறிஸ்து அரசா் தேவாலயம், ரேஸ்கோா்ஸ் சிஎஸ்ஐ தேவாலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை, திருப்பலி நடைபெற்றன.

அதேபோல, கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் திங்கள்கிழமை அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரப் பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனா்.

பக்தா்களின் கூட்டத்தின் காரணமாக மருதமலை அடிவாரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதனால், பக்தா்கள் படி வழியாக நடந்து சென்றும், கோயில் பேருந்தில் பயணித்தும் முருகனை வழிபட்டு விட்டுத் திரும்பியதால், மருதமலை அடிவாரத்தில் இருந்து கோயில் வரை பக்தா்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

புலியகுளம் முந்தி விநாயகா் கோயில், ஈச்சனாரி விநாயகா் கோயில், தண்டு மாரியம்மன் கோயில், கோனியம்மன் கோயில், கோட்டை ஈஸ்வரன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.