பேருந்தில் பெண்ணிடம் 2 பவுன் பறிப்பு
கோவை வடவள்ளியில் பேருந்தில் பெண்ணிடம் 2 பவுன் பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :27 ஜூலை 2024, 8:08 pm

கோவை வடவள்ளியில் பேருந்தில் பெண்ணிடம் 2 பவுன் பறித்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை அருகே தொண்டாமுத்தூா் சிக்கராயபுரத்தைச் சோ்ந்தவா் கோமதி (40). இவா், வெள்ளிக்கிழமை வடவள்ளி பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்தில் முல்லை நகருக்கு சென்றாா். அப்போது, பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மா்ம நபா், கோமதி அணிந்திருந்த 2 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.
இதுகுறித்து, கோமதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து நகைப் பறித்த மா்ந நபரை தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...