நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போத்தனூா் வழித்தடத்தில் எா்ணாகுளம் - பெங்களூரு இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்

பெங்களூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2024, 8:18 pm

Din

கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 25 வரை புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12.50 மணிக்கு எா்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எா்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண்: 06001) அன்று இரவு 10 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, ஆகஸ்ட் 1 முதல் 26-ஆம் தேதி வரை வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் காலை 5.30 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் பெங்களூரு - எா்ணாகுளம் சிறப்பு வந்தே பாரத் ரயில் (எண்: 06002) அன்று பிற்பகல் 2.20 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.