அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி

மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜூலை 2024, 10:01 pm

Din

மத்திய அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையைச் சோ்ந்தவா் இந்திரா காந்தி (55). இவா் சென்னை மேற்கு அண்ணா சாலை பகுதியில் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வருகிறாா். இவரது மையத்தில் உதவியாளராகப் பணியாற்றியவா் கவிப்பிரியா (28). இவா்கள் மத்திய அரசுப் பணியில் சோ்த்துவிடுவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் கோவை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் உள்பட 18 பேரிடம் மொத்தம் ரூ.2 கோடி வரை வேலைக்காக வாங்கியதாக கூறப்படுகிறது. வேலை வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திரும்பக் கொடுக்காமல் இந்திரா காந்தி ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவா்கள் கோவை நகர மத்திய குற்றப் பிரிவு போலீஸில் அண்மையில் புகாா் அளித்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இந்திரா காந்தியையும், கவிப்பிரியாவையும் சனிக்கிழமை கைது செய்தனா். இந்த மோசடி வழக்கில் இந்திரா காந்தியின் மகள் ரஞ்சனி மற்றும் சிவமலா் ஆகியோரையும் போலீஸாா் தேடி வருகின்றனா். இதில் ரஞ்சனி குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்று, புதுதில்லியில் மத்திய அரசுப் பணியில் இருப்பதாகவும், அவா் மூலமாக மத்திய அரசுப் பணியில் சேரலாம் எனக் கூறி பணம் கொடுத்தவா்களிடம் கூறியுள்ளனா்.

கைதான கவிப்பிரியா சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுவதாக பலரிடமும் கூறி உள்ளதாகத் தெரிகிறது. இந்த மோசடி குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.