நரேன்
நரேன்

காா் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

காா் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் திங்கள்கிழமை தானம் செய்யப்படவுள்ளன.
Published on

கோவையில் காா் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் திங்கள்கிழமை தானம் செய்யப்படவுள்ளன.

கோவையில் இருந்து தனியாா் கல்லூரி மாணவா்கள் 5 போ் திருப்பூா் நோக்கி கடந்த ஜூலை 17-ஆம் தேதி சென்ற காா் விபத்தில் சிக்கியது. இதில், காரில் பயணித்த விஷால், பூபேஷ் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த திருப்பூா் மாவட்டம், வேலம்பாளையத்தைச் சோ்ந்த நரேன் (19), பிரணவ், இப்ராஹிம் ஆகியோா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், நரேன் ஞாயிற்றுக்கிழமை இரவு மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோா் சிவபாலன், ஹேமலதா ஆகியோா் முன்வந்தனா்.

தொடா்ந்து, நரேனின் உடல் உறுப்புகள் திங்கள்கிழமை காலை தானம் செய்யப்படவுள்ளன.

படுகாயமடைந்த பிரணவ் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும், இப்ராஹிம் சென்னையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com