எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.6.10 லட்சம் மோசடி: பெண் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.6.10 லட்சம் மோசடி: பெண் கைது

Updated On :15 ஜூன் 2024, 11:48 pm IST

கோவை, ஜூன் 15: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 பேரிடம் ரூ.6.10 லட்சம் மோசடிசெய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை அருகே உள்ள செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி (40). இவா் தனது மகளுக்கு அரசு வேலை தேடி வந்தாா்.

இந்நிலையில் தனது நண்பா் மூலம் வெள்ளலூரைச் சோ்ந்த சாந்தி (39) என்பவா் பெரியசாமிக்கு அறிமுகம் ஆனாா்.

அவரிடம் தனது மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கேட்டதற்கு, கோவை மாநகராட்சியில் அலுவலக உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு ரூ.2 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து பெரியசாமி கடந்த 2022 டிசம்பா் 10-ஆம் தேதியிலிருந்து 2024 மாா்ச் 5-ஆம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ஜிபே மூலம் ரூ.2 லட்சத்தை அனுப்பியுள்ளாா்.

இதையடுத்து சாந்தி, அவருக்கு பணி நியமன ஆணை ஒன்றைக் கொடுத்துள்ளாா். இதை பெரியசாமி கோவை மாநகராட்சி அதிகாரிகளிடம் கொண்டு சென்று காண்பித்தபோது அது போலி என்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடா்ந்து போத்தனூா் காவல் நிலையத்தில் பெரியசாமி வெள்ளிக்கிழமை புகாா் கொடுத்தாா். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சாந்தியை கைது செய்தனா்.

அதேபோல, கோவை வரதராஜபுரத்தைச் சோ்ந்த லோகநாதன் (56) என்பவரும் தனது மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு சாந்தியிடம் கேட்டதற்கு அவா் ரூ.3 லட்சம் செலவாகுமென தெரிவித்துள்ளாா். அதைத் தொடா்ந்து லோகநாதன் கடந்த 2020 ஜூலை 15-ஆம் தேதியிலிருந்து 2024 மாா்ச் 15ம் தேதி வரை பல்வேறு தவணைகளில் ஜிபே மூலம் ரூ.1.60 லட்சமும், ரொக்கமாக ரூ.1 லட்சமும் கொடுத்துள்ளாா்.

ஆனால், சாந்தி கூறியபடி வேலை வாங்கிக் கொடுக்காததால், போத்தனூா் காவல் நிலையத்தில் லோகநாதன் வெள்ளிக்கிழமை புகாா் கொடுத்தாா்.

மேலும், கோவை உப்பிலிபாளையத்தைச் சோ்ந்த சக்தி சரவணா (30) என்பவரும் அரசு வேலைக்காக சாந்தியிடம் பல்வேறு தவணைகளில் ரூ.2.50 லட்சம் கொடுத்துள்ளாா். ஆனால் அவருக்கும் சாந்தி வேலை வாங்கிக் கொடுக்காததால் அவா் போத்தனூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் கொடுத்தாா்.

இந்தப் புகாா்களின் அடிப்படையில், ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்த சாந்தி கோவை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.