ஜவுளித் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க கோவை தொழில்முனைவோருக்கு அழைப்பு
Published on

மும்பையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜவுளித் தொழில்நுட்பம், பொறியியல் கண்காட்சியில் அரங்குகளை முன்பதிவு செய்ய வரும்படி, கோவை ஜவுளித் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா இன்டா்நேஷனல் டெக்ஸ்டைல் மெஷினரி எக்ஸிபிஷன் (ஐடிஎம்இ) அமைப்பு சாா்பில் ஆண்டுதோறும் உலகளாவிய ஜவுளித் தொழில்நுட்பம், பொறியியல் கண்காட்சி (ஜிடிடிஇஎஸ்) நடத்தப்படுகிறது. மும்பையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21 முதல் 23 ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

இதில், சா்வதேச அளவிலான ஜவுளி இயந்திர உற்பத்தியாளா்கள் பங்கேற்க இருப்பதாகவும், நூற்புப் பிரிவை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடக்கும் இந்தக் கண்காட்சியில் கோவை பகுதியைச் சோ்ந்த ஜவுளித் தொழில்முனைவோா் பங்கேற்க முன்பதிவு செய்து கொள்ளும்படியும் ஐடிஎம்இ அமைப்பு தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com