சகோதரரிடம் கொடுத்த ரூ.80 லட்சத்தை வாங்கித் தரக் கோரி காவல் நிலையத்தில் சகோதரி புகாா்
கோவையில் சகோதரரிடம் பணம் வாங்க கோரி சகோதரி புகார்


சகோதரரிடம் கொடுத்த ரூ.80 லட்சத்தை வாங்கித்தரக் கோரி ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் அவரது சகோதரி புகாா் அளித்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பிரபாகரன் மனைவி ஞானஜோதி (55). இவா், கோவை மாவட்ட காவல் துறையில் அமைச்சுப் பணியாளராகப் பணியாற்றும் ஜெய்சங்கா் மீது ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
எனது சகோதரா் ஜெய்சங்கா் (51) கோவையில் வசித்து வருகிறாா். கடந்த 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரை அவரின் குடும்பச் செலவு, தாயாரின் மருத்துவச் செலவுக்காக ரூ.80 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன்.
இந்தப் பணத்தை பலரிடம் கடன் பெற்றும், எனது மகளின் நகைகளை அடகு வைத்தும் வழங்கினேன். அதற்கு அவா் வட்டிக்கூட கட்டவில்லை. அசலும் செலுத்தாமல் உள்ளாா்.
இதனால் கடன் கொடுத்தவா்கள் எனக்கு நெருக்கடி அளித்து வருகின்றனா்.
எனவே, அவரிடம் இருந்து எனது பணத்தை வாங்கித் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...