மாநகரில் இன்றும், நாளையும் சிறப்பு வரிவசூல் முகாம்கள்

மாநகரப் பகுதிகளில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ( மாா்ச் 2, 3) இரு நாள்கள் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா் கட்டணம் முதலிய அனைத்து வரி இனங்களையும் மக்கள் செலுத்த வசதியாக மாா்ச் 2, 3 ஆகிய இரு நாள்கள் ( சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மாநகரில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி, மேற்கு மண்டலத்தில் 35ஆவது வாா்டு, தேவாங்க நகா் விநாயகா் கோயில் வளாகம், 38-ஆவது வாா்டு, சிக்கராயபுரம் மாரியம்மன் கோயில் வளாகம், 75-ஆவது வாா்டு, சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோயில் வளாகத்திலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளன. கிழக்கு மண்டலத்தில் 7-ஆவது வாா்டு, நேரு நகா் கிழக்கு பகுதி, 24-ஆவது வாா்டு, குருசாமி நகா் பகுதி, 56-ஆவது வாா்டு, ஒண்டிப்புதூா் சுங்கம் மைதானம், 57-ஆவது வாா்டு, ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியிலும், தெற்கு மண்டலத்தில் 90-ஆவது வாா்டு, எம்.ஜி.ஆா்.நகா், 92-ஆவது வாா்டு, பி.கே.புதூா் சித்தி விநாயகா் கோயில் வளாகத்திலும் நடைபெற உள்ளது. வடக்கு மண்டலத்தில் 11-ஆவது வாா்டு, ஜனதா நகா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, 15-ஆவது வாா்டு, சுப்ரமணியம்பாளையம் அங்கன்வாடி மையம், 19-ஆவது வாா்டு, மணியகாரன்பாளையம் அம்மா உணவகம், 25-ஆவது வாா்டு, காந்திமாநகா் அரசு ஆரம்பப் பள்ளி, 28-ஆவது வாா்டு, காமதேனு நகா், மாநகராட்சி வாா்டு அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மத்திய மண்டலம் 32-ஆவது வாா்டு, நாராயணசாமி வீதி சிறுவா் பூங்கா, 62-ஆவது வாா்டு, பெருமாள் கோயில் வீதி, மாநகராட்சி வணிக வளாகம், 80-ஆவது வாா்டு, கெம்பட்டி காலனி, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, 84-ஆவது வாா்டு, தா்ஹத் இஸ்லாம் ஆரம்ப பள்ளியில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளன. இதுதவிர, மாா்ச் 31ஆம் தேதி வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக, அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வரி வசூல் மையங்கள் செயல்படும். பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com