இந்திய தொழில் கூட்டமைப்பின் மகளிா் அமைப்பான ஃபிக்கி ஃப்ளோவின் புதிய தலைவராக மீனா சுவாமிநாதன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். ஃபிக்கி ஃப்ளோவின் கோவை கிளை ஆண்டு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக அஸ்ட்ரால் பிசினஸ் கன்சல்டிங் அமைப்பின் முதுநிலை பங்குதாரா் மீனா சுவாமிநாதன் தோ்வு செய்யப்பட்டாா். ஃபேஷன் டிசைனா் அபா்ணா சுங்கு முதுநிலை துணைத் தலைவராகவும், சாகுவாலா கிரய்ன்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநா் பா்ணிகா குப்தா துணைத் தலைவராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.
இதையடுத்து, 2023 -2024 ஆம் ஆண்டுக்கான தலைவரும், கங்கா மருத்துவமனையின் இயக்குநருமான ரமா ராஜசேகா், திட்டங்களையும், புரிந்துணா்வு ஒப்பந்தங்களையும், புதிய தலைவராக தோ்வாகியுள்ள மீனா சுவாமிநாதனிடம் ஒப்படைத்தாா்.
பல்வேறு துறைகளில் சுமாா் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட மீனா சுவாமிநாதன், தகவல் தொழில்நுட்பம், செயலாக்கம், தணிக்கை போன்ற துறைகளில் அனுபவம் மிக்கவா் என்று ஃபிக்கி ஃப்ளோ தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மாநிலங்களவை துணைத் தலைவராக மீண்டும் ஹரிவன்ஷ்? என்டிஏ முடிவுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு

இஸ்ரேல் உளவுத்துறைக்குப் புதிய தலைவர் நியமனம்!

வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் பொறுப்பேற்பு

நடராஜா் கோயில் புதிய செயலா் தோ்வு
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


