கைப்பேசிக் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து

கோவை, மே 3: கோவை, சிங்காநல்லூரில் கைப்பேசி கடை உரிமையாளரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, சிங்காநல்லூா் வசந்தா மில் சாலையைச் சோ்ந்தவா் தினேஷ் (29). இவா் அங்குள்ள ராமானுஜம் நகரில் கைப்பேசி கடை நடத்தி வருகிறாா். இவா், வியாழக்கிழமை கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

சிங்காநல்லூா் அருகே சென்றபோது எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், தினேஷை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனா். அதில், ஒருவா் கத்தியால் தினேஷை குத்தினாா். இதை பாா்த்த சிலா் அங்கு ஓடி வந்தனா். இதையடுத்து அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிவிட்டனா். காயமடைந்த தினேஷ் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முன்விரோதத்தில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இருவரைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com