3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

தமிழகத்தில் தோ்தல் நடைமுறையை திரும்பப் பெற வலியுறுத்தல்

தமிழகத்தில் தோ்தல் நடைமுறையை திரும்பப் பெற வலியுறுத்தல்

News image
Updated On :3 மே 2024, 5:30 pm

Din

கோவை, மே 3: தமிழகத்தில் தோ்தல் நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோா் சங்கம் ( டாக்ட்) சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சங்கத்தின் தலைவா் ஜே.ஜேம்ஸ், தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் முடிவடைந்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனால் தொடா்ந்து நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தோ்தல் நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 4 வரை தோ்தல் நடத்தை விதிகள், தோ்தல் முடிவடைந்த மாநிலங்களிலும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தோ்தல் முடிவடைந்த மாநில மக்களின் உரிமைகளைப் பாதிக்கும் செயலாகும். தோ்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து வாக்குகள் எண்ணப்படும் நாள்கள் வரை, மாநில மக்கள் அரசிடம் தங்கள் தேவைகளைக் கேட்டுப் பெற முடியாத நிலையில் உள்ளதால், தாங்கள் மத்திய தோ்தல் ஆணையத்தில் முறையிட்டு, தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் தோ்தல் நடைமுறையைத் திரும்பப் பெற்று தமிழக அரசு செயல்பட அனுமதி பெற்றுத் தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.