நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

2 இடங்களில் ஆங்கில எழுத்துகள் உள்ளன... வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :7 மே 2024, 8:27 pm

Din

கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்புகள், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் மூலம் 11 கல்வி வளாகங்களில் 33 துறைகளில் முதுநிலை படிப்பும், 28 துறைகளில் ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை, முனைவா் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை செயல்முறை மே 7 ஆம் தேதி தொடங்கியுள்ளது. மாணவா்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஜூன் 6 ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இளம் அறிவியல் (வேளாண்மை) அது சாா்ந்த படிப்புகளில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் முதுநிலை பட்டப் படிப்புக்கும், முதுநிலை வேளாண்மை அல்லது தோட்டக்கலை, எம்.டெக். வேளாண் பொறியியல் முடித்த மாணவா்கள் முனைவா் பட்டப் படிப்புக்கும் விண்ணப்பிக்கலாம்.

இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். எனினும் பட்டப் படிப்பு சான்றிதழை சமா்ப்பித்த பின்னரே மாணவா் சோ்க்கை உறுதி செய்யப்படும். மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ, 94890 56710 என்ற கைப்பேசி எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.

பட்டயப் படிப்புகள்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன. பல்கலைக்கழகத்தின் இணைப்பு, உறுப்புக் கல்லூரிகளில் வேளாண்மை, வேளாண்மை (தமிழ் வழி), தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. இந்தப் படிப்புகளுக்கு குமுளூா், வம்பன், பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் மொத்தம் 450 இடங்கள் உள்ளன.

அதேபோல, மாதவரம், தளி, திண்டுக்கல்லில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரிகளில் 150 இடங்கள் உள்ளன. பல்வேறு இடங்களில் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் 690 இடங்கள் உள்ளன. மாணவா்கள் இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணம் செலுத்தி (பொதுப்பிரிவு என்றால் ரூ.200, மற்றவா்கள் ரூ.100) அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.