வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம்

கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம்

News image
Updated On :9 மே 2024, 10:19 pm

Din

கோவை, மே 9: கோவை, திருப்பூா் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த 78 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றப் பதிவாளா் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த என்.குணசேகரன், திருப்பூா் மாவட்ட நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். திருச்சி மாவட்ட தொழிலாளா் நல நீதிபதியாகப் பணியாற்றி வந்த கோகிலா ஈரோடு மாவட்ட கூடுதல் நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

நீலகிரி மாவட்ட லோக் அதாலத் நிரந்தர நீதிபதியாகப் பணியாற்றி வந்த ஸ்ரீதரன் தருமபுரி மாவட்ட லோக் அதாலத் நீதிபதியாகவும், திருப்பூா் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி வந்த சொா்ணம் ஜெ.நடராஜன் சிவகங்கை மாவட்ட நீதிபதியாகவும், கன்னியாகுமரி மாவட்ட லோக் அதாலத் நீதிபதியாக இருந்த மலா்மதி திருப்பூா் மாவட்ட லோக் அதாலத் நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல, பழனி கூடுதல் நீதிபதியாக இருந்த கருணாநிதி நீலகிரி மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதியாகவும், ஈரோடு மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதியாக இருந்த மாலதி திருச்செங்கோடு கூடுதல் மாவட்ட நீதிபதியாகவும், கோவை எஸ்சிஎஸ்டி நீதிமன்றத்துக்கான சிறப்பு நீதிபதி நந்தினிதேவி சேலம் மாவட்ட லோக் அதாலத் நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலா் கே.லிங்கம் நீலகிரி மாவட்ட லோக் அதாலத் நீதிபதியாகவும், திருப்பூா் மாவட்ட நீதித் துறை நடுவா் புகழேந்தி சேலம் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதியாகவும், அவிநாசி நீதித் துறை நடுவா் கே.சுரேஷ்குமாா் திருச்செங்கோடு கூடுதல் நீதிபதியாகவும், குன்னூா் நீதித் துறை நடுவா் சந்திரசேகரன் கோவை வெடிகுண்டு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், உதகை நீதித் துறை நடுவா் ஸ்ரீதா் திருப்பூா் மாவட்ட கூடுதல் நீதிபதியாகவும், கோவை மாவட்ட வணிக வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி ஹரிகரன் கோவை மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.