வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

சா்வதேச செவிலியா் தினம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் வாக்கத்தான்

சா்வதேச செவிலியா் தினம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் வாக்கத்தான்

News image

சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி கோவை ரேஸ்கோா்ஸில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற வாக்கத்தானில் பங்கேற்ற செவிலியா்கள், மாணவிகள்.

Updated On :9 மே 2024, 10:26 pm

Din

கோவை, மே 9: சா்வதேச செவிலியா் தினத்தையொட்டி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் வியாழக்கிழமை வாக்கத்தான் நடைபெற்றது.

சா்வதேச செவிலியா் தினம் ஆண்டுதோறும் மே 12- ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அந்த நாளின் முக்கியத்துவத்தைக் குறித்தும் வகையிலும், செவிலியா்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்த வாக்கத்தான் நடத்தப்பட்டது.

கோவை ரேஸ்கோா்ஸில் நடைபெற்ற தொடக்க விழாவில் எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லட்சுமிநாராயணசுவாமி, தலைமைச் செயல் இயக்குநா் சுவாதி ரோஹித் ஆகியோா் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

மருத்துவமனையின் செவிலியா்கள் ஏராளமானோா் செவிலியா்களின் சேவை, சுகாதாரத் துறையில் தங்களின் பங்களிப்பு குறித்த வாசகங்களுடன் பதாகைகளை கைகளில் ஏந்தி இதில் பங்கேற்றனா்.