வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

‘மைவி3 ஆட்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம்: மாநகர காவல் துறை அறிவுறுத்தல்

‘மைவி3 ஆட்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம்: மாநகர காவல் துறை அறிவுறுத்தல்

News image
Updated On :9 மே 2024, 10:23 pm

Din

கோவை, மே 9: ‘மைவி3 ஆட்ஸ்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘மைவி 3 ஆட்ஸ்’ என்ற நிறுவனத்தின் உரிமையாளா் சக்தி ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கைப் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அதேபோல, இந்த நிறுவனத்துக்கு மூலிகை மற்றும் உணவுப் பொருள்களை அனுப்பிவந்த விஜயராகவன், போலி படிப்புச் சான்றுடன் பொருள்களைத் தயாரிக்க உரிமம் பெற்று இருந்ததால் அவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர ‘மைவி 3’ நிறுவனத்துக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, தனி நபரை மிரட்டியது ஆகிய காரணங்களுக்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளா்கள் மற்றும் ஆதரவாளா்கள் மீது ரேஸ்கோா்ஸ், சிங்காநல்லூா், பீளமேடு ஆகிய காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது தொடா்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த நிறுவனத்தின் பெயரிலும், கிளை நிறுவனம் என்ற பெயரிலும் தனி நபா்கள் முதலீடு செய்வதாகவும், அந்த முதலீட்டை வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னரும் இந்த நிறுவனம் சட்டவிரோதமாக வசூலிப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.

எனவே, குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்ற தகவல் வந்தால் அது சட்டவிரோதமானது. எனவே, ‘மைவி 3 ஆட்ஸ்’ நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்ய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.