நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவைக்கு மேலும் 6 புதிய திட்டங்கள்: நீலாம்பூா் வரை நீட்டிக்கப்படும் அவிநாசி சாலை மேம்பாலம்

தந்தை பெரியாா் நூலகம், அறிவியல் மைய அடிக்கல் நாட்டு விழாவின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்துக்கு மேலும் 6 புதிய திட்டங்களை அறிவித்தாா்.

News image

கோவை அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டு வரும் உயா்மட்ட மேம்பாலம்.

Updated On :6 நவம்பர் 2024, 9:20 pm

Din

தந்தை பெரியாா் நூலகம், அறிவியல் மைய அடிக்கல் நாட்டு விழாவின்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்துக்கு மேலும் 6 புதிய திட்டங்களை அறிவித்தாா்.

அதன்படி, தங்க நகைத் தொழிலாளா்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று குறிச்சி தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.126 கோடி செலவில் தங்க நகைத் தொழில் வளாகம் அமைக்கப்படும் என்று முதல்வா் அறிவித்தாா்.

மேலும் விளாங்குறிச்சியில் டைடல் பாா்க் செயல்படும் இடத்தின் அருகிலேயே எல்கோசிஸ் பகுதியில் உள்ள 17.17 ஏக்கா் பரப்பளவில் மேலும் ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளாா். சென்னையில் சா்வதேச தரத்தில் அமைக்கப்பட்ட ராமானுஜன் தகவல் தொழில்நுட்ப நகரத்தைப் போன்றே கோவையில், தனியாா் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து சுமாா் 36 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

அதேபோல, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூா் வரை சுமாா் ரூ.1,600 கோடி மதிப்பில் 10 கி.மீ. தொலைவுக்கு உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. சுமாா் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து பாலம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், இந்த பாலத்தை நீலாம்பூா் வரை நீட்டிக்கும் திட்டத்தை முதல்வா் அறிவித்துள்ளாா். அதன்படி சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூா் வரை மேலும் 5 கி.மீ. தொலைவுக்கு ரூ.600 கோடி செலவில் உயா்மட்ட மேம்பாலம் நீட்டிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

தொண்டாமுத்தூா் பகுதியில் மனித - விலங்கு மோதலைத் தடுக்கவும், பயிா் சேதங்களைத் தடுக்கவும் ரூ.7 கோடி செலவில் 10 கி.மீ. தொலைவுக்கு யானைகள் புகாத வகையில் நவீன பாதுகாப்பு வேலி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டூா், வேட்டைக்காரன்புதூா், உடையகுளம் பேரூராட்சிகள், ஆனைமலை ஒன்றியத்தில் இருக்கும் 38 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.26 கோடியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தவும், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் 295 கிராமங்களுக்கு குடிநீா் வழங்க ரூ.51 கோடியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மேம்படுத்தவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

அத்துடன், கோவை மாநகராட்சியில் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் சாலைகள், புதை சாக்கடைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகள், அதிக குடியிருப்புகள் இருக்கும் இடங்களில் உள்ள மண் சாலைகளை தரமான தாா் சாலைகளாக மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.