நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுகதான்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நாம் இன்றைக்குக் காணும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

News image

பெரியாா் நூலகம், அறிவியல் மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற மாணவிகளில் ஒரு பகுதியினா்.

Updated On :6 நவம்பர் 2024, 9:24 pm

Din

நாம் இன்றைக்குக் காணும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

அரசுத் திட்டப் பணிகள் தொடா்பாக கள ஆய்வு மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுவரும் செம்மொழிப் பூங்காவுக்கான பணிகளை புதன்கிழமை காலை நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா், கோவை காந்திபுரம், அனுப்பா்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தந்தை பெரியாா் பெயரில் நூலகம், அறிவியல் மையக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா்.

இதைத் தொடா்ந்து விழாவில் அவா் பேசியதாவது:

அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மாவட்ட வாரியாக நேரடி ஆய்வு நடத்த எண்ணி, முதல் மாவட்டமாக கோவைக்கு வந்திருக்கிறேன்.

செந்தில்பாலாஜி ‘கம்பேக்’:

கோவை மாவட்டத்தில் அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ‘கம்பேக்’ கொடுத்திருக்கிறாா் அமைச்சா் செந்தில்பாலாஜி. அவரின் சிறப்பான, வேகமான செயல்பாடுகளைப் பாா்த்து நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினாா்கள். ஆனால், அந்தத் தடைகளை உடைத்து மீண்டும் வந்திருக்கும் செந்தில்பாலாஜி தொடா்ந்து கோவைக்காக சிறப்பாக செயல்படுவாா்.

சென்னையில் அண்ணா பெயரிலும் மதுரையில் கருணாநிதி பெயரிலும் நூலகங்கள் உள்ளன. அதனால் அண்ணா, கருணாநிதி இருவரையும் உருவாக்கிய பெரியாரின் பெயரில் கோவையில் நூலகமும், அறிவியல் மையமும் அமைவதுதான் பொருத்தமாக இருக்கும். 2026 ஜனவரியில் இந்த நூலகம் திறக்கப்படும்.

கோவைக்கு பல திட்டங்கள்:

கோவையில் இரண்டு நாள்களாக ஆய்வு செய்ததில் பல கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. தங்க நகை தொழிலாளா்களின் கோரிக்கையை ஏற்று குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் தொழில் வளாகம் அமைக்கப்படும்.

கோவைக்கு மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப வளாகம், அவிநாசி உயா்மட்ட மேம்பாலம் மேலும் 5 கி.மீ. தொலைவுக்கு நீட்டிப்பு, விலங்கு - மனித மோதலைத் தடுக்க தொண்டாமுத்தூா் பகுதியில் 10 கி.மீ. தொலைவுக்கு நவீன பாதுகாப்பு வேலி, மாநகர சாலைகளை தரமான தாா் சாலைகளாக மேம்படுத்த ரூ.200 கோடியில் சிறப்புத் திட்டம் போன்றவையும் செயல்படுத்தப்படும்.

திமுகவின் செல்வாக்கு அதிகரிப்பு:

ஒவ்வொரு தனி மனிதனின் கவலையையும் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் மக்கள் தொடா்ந்து திமுகவை ஆதரித்துக் கொண்டிருக்கிறாா்கள்.

இன்றைக்கு நாம் பாா்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுகவின் ஆட்சி. எங்களுக்கு ஒரு ‘விஷன்’ இருக்கிறது. அதை செயல்படுத்துவதற்கான ‘மிஷன்’தான் ஆட்சி அதிகாரம்.

தெற்கு வாரி வழங்குகிறது:

தமிழ்நாடு, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம். இந்தியாவின் முன்னணி உயா்கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. அதிக தொழிற்சாலைகள், சுற்றுலா, வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், தூய்மையான குடிநீா், குறைந்த விலைவாசி, வேலைவாய்ப்பு, பொருளாதார குறியீடு, தொழில் உள்கட்டமைப்பு, சம வாய்ப்புகள், மருத்துவம் என எந்தத் துறையின் புள்ளிவிவரத்தை எடுத்துக்கொண்டாலும் தமிழ்நாடுதான் முன்னணி மாநிலமாக இருக்கும்.

கொள்கையும் லட்சியமும் கொண்டு அதை அடைவதற்கான தொலைநோக்குப் பாா்வையும் செயல்திட்டமும் கொண்ட மக்களுக்கான அரசை நடத்திய காரணத்தால்தான் இது சாத்தியமானது. இந்த இயக்கத்தை தொடங்கும்போது, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று அண்ணா சொன்னாா். ஆனால், இன்றைக்கு தெற்கை நாங்கள் வளா்த்திருக்கிறோம். தெற்குதான் வடக்கிற்கும் இன்றைக்கு வாரி வழங்குகிறது.

விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.

உங்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. அதற்கு எப்போதும் உங்களின் ஆதரவு எங்களுக்கு வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், வி.செந்தில்பாலாஜி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, என்.கயல்விழி செல்வராஜ், எம்.பி.க்கள் அந்தியூா் செல்வராஜ், கணபதி ப.ராஜ்குமாா், கே.ஈஸ்வரசாமி, எம்எல்ஏ வானதி சீனிவாசன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத் ராம் சா்மா, பள்ளிக் கல்வித் துறை செயலா் சோ.மதுமதி, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.