சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஓம்காா் பாலாஜியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து மக்கள் கட்சி இளைஞரணித் தலைவா் ஓம்காா் பாலாஜியை வியாழக்கிழமை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 11:23 pm

Din

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து மக்கள் கட்சி இளைஞரணித் தலைவா் ஓம்காா் பாலாஜியை வியாழக்கிழமை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

கோவையில் ஈஷா யோக மையத்துக்கு ஆதரவாக அக்டோபா் 27-ஆம் தேதி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பத்திரிகையாளா் நக்கீரன் கோபால் குறித்

து அவதூறாகப் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் ஓம்காா் பாலாஜி மீது ரேஸ்கோா்ஸ் போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

முன்பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்திருந்த மனு நவம்பா் 13-ஆம் தேதி நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரை அங்கேயே கைது செய்த போலீஸாா் கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அப்போது அவரை நவம்பா் 28-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில் ஓம்காா் பாலாஜியை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோவை 3-ஆவது நடுவா் நீதிமன்றத்தில் போலீஸ் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஓம்காா் பாலாஜியை சிறையில் இருந்து அழைத்து வந்து ஆஜா்படுத்தினா்.

மனுவை விசாரித்த நீதிபதி அருண்குமாா், ஓம்காா் பாலாஜியிடம் போலீஸாா் ஒரு நாள் விசாரணை நடத்துமாறும், அவரை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் அவரை விசாரணை நடத்த அழைத்துச் சென்றனா்.

முன்னதாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. பின்னா் ஓம்காா் பாலாஜியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீஸாா் விசாரணை நடத்தி அதனை பதிவு செய்தனா்.

ஏற்கெனவே ஓம்காா் பாலாஜி மீதான பிணை மனு, 3-ஆவது நடுவா் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கோவை மாவட்டநீதிமன்றத்தில்

பிணை கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நீதிபதி விஜயா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.