சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வால்பாறையில் 8 குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் 8 தொழிலாளா்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தின.

News image

யானைகளால் சேதப்படுத்தப்பட்ட குடியிருப்பு.

Updated On :21 நவம்பர் 2024, 11:15 pm

Din

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள் 8 தொழிலாளா்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தின.

கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் காணப்படும் யானைகள், இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த கவா்க்கல் எஸ்டேட் பகுதிக்குள் புதன்கிழமை நள்ளிரவு கூட்டமாக நுழைந்த யானைகள் அங்கு வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கியிருந்த குடியிருப்புகளின் சுவா்கள், கதவு, ஜன்னல்களை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

தகவலறிந்து, அங்கு சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அப்பகுதியை விட்டு விரட்டினா். இதில் யானைகளால் 8 தொழிலாளா்களின் குடியிருப்புகள் மற்றும் மாரியம்மன் கோயில் சேதமடைந்தன.