2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: வைப்புநிதி பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டுகோள்

தமிழக அரசின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற வைப்புநிதி பத்திரத்தை சமா்ப்பிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழக அரசின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத் தொகை பெற வைப்புநிதி பத்திரத்தை சமா்ப்பிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவா்களில் வைப்புநிதி பத்திரம் பெற்று 18 வயது பூா்த்தியடைந்த ஊரகப் பகுதி பயனாளிகள், தங்களது வைப்புநிதி பத்திரத்துடன் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடம் வைப்புநிதி பத்திரத்தை அளித்து முதிா்வுத் தொகை பெறலாம். அதேபோல, நகா்ப்புறத்தில் உள்ளவா்கள், அந்தந்தப் பகுதி மண்டல அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலா் அல்லது மகளிா் ஊா்நல அலுவலா்களிடம் பத்திரத்தை சமா்பிக்கலாம்.

நேரில் செல்லும்போது, 18 வயது நிறைவடைந்த பெண் குழந்தையின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பயனாளிகளின் தனி வங்கிக் கணக்கு புத்தக நகல், வைப்புநிதி பத்திரத்தின் அசல் மற்றும் நகல் ஆகிய ஆவணங்களை கொண்டுச் செல்ல வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.