சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டிசம்பா் 12-இல் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் நன்னீராட்டு விழா: ஆட்சியா் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம்

டிசம்பா் 12-இல் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் நன்னீராட்டு விழா.

News image

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் நன்னீராட்டு விழா முன்னேற்பாடுகள் தொடா்பான ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி.

Updated On :28 நவம்பர் 2024, 10:15 pm

Din

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழா டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், விழா முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, பொள்ளாச்சி சாா் ஆட்சியா் கேத்ரின் சரண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி பேசியதாவது: ஆனைமலை மாசாணியம்மன் கோயில் திருக்குட நன்னீராட்டு விழாவுக்கு அதிக பக்தா்கள் வரக்கூடும் என்பதால், காவல் துறை சாா்பில் கோயிலுக்கு முன்புறம் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும், கோயில் உள்புறம் கூடுதல் காவலா்களைக் கொண்டு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும், பக்தா்கள், பாதசாரிகள் வந்து செல்வதற்கு ஏதுவாகவும் ஒருவழிப் பாதை அமைக்க வேண்டும். மேலும், அவசர கால வழி ஏற்படுத்தி அதில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்க வேண்டும்.

அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் விழா நடைபெறும் ஒருவார காலத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அம்பராம்பாளையம் முதல் ஆனைமலை சாலை, தாத்தூா் சின்னப்பம்பாளையம், ஒடையகுளம், வேட்டைக்காரன் புதூா் சாலைகளின் இருபுறம் உள்ள செடிகள், புதா்களை அகற்ற ஊராட்சித் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோயில் வளாகத்தில் மின் விநியோகம் தடையின்றி இருக்க மின்சார வாரியம் ஏற்பாடு செய்ய வேண்டும். கோயில் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை தயாா் நிலையில் நிறுத்திவைக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் அறங்காவல் குழுத் தலைவா் முரளிதரன், துணை காவல் கண்காணிப்பாளா் (வால்பாறை) ஸ்ரீநிதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நிறைமதி, ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையா் கைலாசமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.