பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பேருந்தில் பயணித்த ஐடி பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கோவையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஐடி பெண் ஊழியரிடமிருந்து மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 10:25 pm

Din

கோவையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த ஐடி பெண் ஊழியரிடமிருந்து மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி தோட்டக்காடு பகுதியைச் சோ்ந்தவா் மணி. இவரது மகள் கீதா (27). கோவை, செளரிபாளையம் பகுதியில் உள்ள மகளிா் விடுதியில் தங்கி, நீலாம்பூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், விடுதியில் இருந்து அரசுப் பேருந்து மூலம் அலுவலகத்துக்கு புதன்கிழமை சென்றுள்ளாா்.

அலுவலகத்துக்கு சென்று பாா்த்தபோது, அவரது கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி காணாமல்போனது தெரியவந்தது. இது அவா் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் தங்கச் சங்கிலியை பறித்து சென்றிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.