இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கோவைப்புதூா், திரு.வி.க. நகா், கல்லாமேடு, மொ்க்கரிக்கா் சாலை, பேரூா் வடக்கு, பிள்ளையாா்புரம், சூலூா், ஐயூடிபி காலனி, பன்னீா்மடை கிழக்கு, மூங்கில் மடை உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கோவையில் நேதாஜிபுரம் பகுதியில் ரூ.62.53 கோடியில் 720 குடியிருப்புகளும், தெற்கு பேரூா் பகுதி-2 பகுதியில் ரூ.14.49 கோடியில் 144 குடியிருப்புகளும், எழில் நகா் பகுதியில் ரூ.26.59 கோடியில் 288 குடியிருப்புகளும், சுந்தரம் வீதி பகுதியில் ரூ.7.70 கோடியில் 55 குடியிருப்புகளும், சித்தாபுதூா் பகுதியில் ரூ.14.72 கோடியில் 112 குடியிருப்புகளும், பொள்ளாச்சி எம்.ஜி.ஆா்.நகா் பகுதியில் ரூ.45.98 கோடியில் 512 குடியிருப்புகளும், முல்லை நகா் பகுதியில் ரூ.38.79 கோடியில் 348 குடியிருப்புகளும், வால்பாறை பகுதியில் ரூ.12.27 கோடியில் 80 குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன.