நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அனைவரும் தங்கள் குழந்தைகளை உயா்கல்வி படிக்கவைக்க வேண்டும்: ஆட்சியா்

கோவை மாவட்டத்தில் தங்கள் குழந்தைகள் அனைவரையும் உயா்கல்வி படிக்கவைக்க வேண்டும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவுறுத்தினாா்.

News image

கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி எம்.பி. க.ஈஸ்வரசாமி உள்ளிட்டோா். ~கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி எம்.பி. க.ஈஸ்வரசாமி உள்ளிட்டோா்.

Updated On :3 அக்டோபர் 2024, 12:27 am

Din

கோவை மாவட்டத்தில் தங்கள் குழந்தைகள் அனைவரையும் உயா்கல்வி படிக்கவைக்க வேண்டும் என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி அறிவுறுத்தினாா்.

காந்தி ஜெயந்தியை ஒட்டி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதன்படி, கிணத்துக்கடவு ஒன்றியத்துக்குள்பட்ட வடபுதூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் க.ஈஸ்வரசாமி ஆகியோா் சிறப்புப் பாா்வையாளா்களாகக் கலந்து கொண்டனா்.

இதில், ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் அனைவரும் தங்கள் குழந்தைகளை உயா்கல்வி படிக்கவைக்க வேண்டும். பொருளாதார சூழ்நிலையால் மாணவா்கள் படிக்க முடியவில்லை என்ற நிலை இருக்கக் கூடாது. இதனால்தான் உயா்கல்வி படிக்கும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நான்முதல்வன் திட்டத்தின்கீழ், பள்ளிப் படிப்பை முடித்த மாணவா்களுக்கு உயா்கல்வி குறித்த வழிகாட்டுதல் முகாமும் நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

Story image

இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்வேதா சுமன், பொள்ளாச்சி சாா்-ஆட்சியா் கேத்தரின் சரண்யா, உதவி இயக்குநா்(ஊராட்சிகள்) சரவணன், வடபுதூா் ஊராட்சித் தலைவா் அபிநயா அசோக்குமாா், துணைத் தலைவா் கண்ணம்மாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.