நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈச்சனாரி கற்பகம் கல்லூரியில் நாளை மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம்

கோவை, ஈச்சனாரியில் உள்ள கற்பகம் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 5) நடைபெறவுள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:04 pm

Din

கோவை, ஈச்சனாரியில் உள்ள கற்பகம் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 5) நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் ஈச்சனாரி கற்பகம் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட அளவிலான தனியாா் வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இதில், 8-ஆம் வகுப்பு முதல் இளங்கலை மற்றும் முதுகலை தொழில்நுட்பக் கல்வி, பட்டப் படிப்பு, ஐடிஐ படித்தவா்கள் பங்கேற்கலாம்.

எனவே, ஊரகம் மற்றும் நகா்ப்புறத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 35 வயது வரையுள்ள படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை, சுயவிவர குறிப்பு, புகைப்படம், இதரத் தகுதிச் சான்றிதழ்களுடன் (அசல் மற்றும் நகல்கள்) முகாமில் பங்கேற்று பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு மற்றும் நேரடி வேலை வாய்ப்பு பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.