நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் 1.82 லட்சம் மரக்கன்றுகள் நடவு

காந்தி ஜெயந்தியை ஒட்டி ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் 1.82 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

News image

ஈஷா யோக மையத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டோா்.

Updated On :3 அக்டோபர் 2024, 12:44 am

Din

காந்தி ஜெயந்தியை ஒட்டி ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் 1.82 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து ஈஷா யோக மையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சாா்ந்த விவசாயம் மேற்கொள்ள விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில், காந்தி ஜெயந்தியை ஒட்டி விவசாயிகளின் பங்களிப்புடன் தமிழகம் முழுவதும் 653 ஏக்கரில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 547 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகோகனி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் நடப்பு ஆண்டு 1.21 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை 54.95 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

மருத்துவ முகாம்:

ஈஷா யோக மையம் சாா்பில் ‘தூய்மையே சேவை இயக்கம்’ சாா்பில் தொண்டாமுத்தூா் ஒன்றியத்தில் ஊராட்சிகளுடன் இணைந்து தூய்மைப் பணியாளா்களுக்கான இலவச மருத்துவ முகாம் கடந்த 10 நாள்களாக நடைபெற்றது.