நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவையில் அக்.14 முதல் குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப்- 2 முதன்மைத் தோ்வுகான இலவசப் பயிற்சி வகுப்பு அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 12:40 am

Din

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப்- 2 முதன்மைத் தோ்வுகான இலவசப் பயிற்சி வகுப்பு அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்குகிறது.

இது குறித்து ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின்கீழ் குரூப்-2, குரூப்-2ஏ பிரிவுகளில் உள்ள 2327 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த செப்டம்பா் 14-ஆம் தேதி நடைபெற்றது. முதன்மைத் தோ்வு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குரூப்-2 முதன்மைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் வாரத் தோ்வுகள், முழு மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. மேலும் ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9361576081 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.