நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராமநாதபுரத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவை, ராமநாதபுரம் 80 அடி சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கட்டடங்களை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 9:14 pm

Din

கோவை, ராமநாதபுரம் 80 அடி சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கட்டடங்களை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை அகற்றினா்.

கோவை மாநகரப் பகுதிகளில் நீா்வழித்தட ஆக்கிரமிப்புகள், சாலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு மாநகராட்சி நிா்வாகம் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் 80 அடி சாலையை ஆக்கிரமித்து சிறிய அளவிலான தடுப்புச் சுவா்கள், தகரச் சீட்டுகள் அமைக்கப்பட்டிருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், 80 அடி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா். இதையடுத்து, மத்திய மண்டல உதவி நகரத் திட்ட அலுவலா் கோவிந்த பிரபாகா் தலைமையிலான மாநகராட்சி அலுவலா்கள் சாலை ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் வியாழக்கிழமை அகற்றினா்.