கோவையில் விபத்து மீட்பு ஒத்திகை
கோவை சா்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விபத்து மீட்பு ஒத்திகைப் பயிற்சி ~

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விபத்து மீட்பு ஒத்திகைப் பயிற்சி ~
கோவை சா்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் விபத்து மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
கோவை ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை திடீரென ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்தன. அவற்றில் இருந்து மருத்துவா்கள் மற்றும் செவிலியா் அடங்கிய மருத்துவக் குழுவினா் ரயில் நிலையத்துக்குள் நுழைந்தனா். அப்போது ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகளுடன் ஒரு ரயில் வந்து நின்றது.
அதிலிருந்த ஒரு ரயில் பெட்டியில் இருந்து பயணிகள் அலறும் சப்தம் கேட்டது. இதையடுத்து மருத்துவக் குழுவினா் உடனடியாக ரயில் நிலைய நடைமேடைக்குச் சென்றனா். அங்கு நின்றிருந்த ரயிலின் ஒரு பெட்டியில் பயணிகள் சிலா் ரத்தக் காயங்களுடன் வலியால் அலறியபடி காணப்பட்டனா்.
இதையடுத்து ரயில்வே ஊழியா்கள், போலீஸாா் மற்றும் மருத்துவக் குழுவினா் காயம் அடைந்த பயணிகளை பத்திரமாக மீட்டு ஸ்டிரெச்சா் மூலம் ரயில் நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்து, அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக புறப்பட்டு ச் சென்றனா்.
கோவை ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த பயணிகளை மருத்துவக் குழுவினா் மீட்பதைப் பாா்த்து அங்கு வந்திருந்த பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா்.
அதனால், ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து ரயில் நிலைய அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம், ரயில் நிலையத்தில் அவா்கள் கண்ட காட்சி விபத்து ஒத்திகை எனவும், இதனால், பயணிகள் பீதியடைய வேண்டாமெனவும் அறிவித்தனா். அதன் பின்னரே பயணிகள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனா்.

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விபத்து மீட்பு ஒத்திகைப் பயிற்சி.
இந்த விபத்து ஒத்திகை குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கோவை உள்ளிட்ட பெரிய நகரங்களில் ரயில்களில் பொதுமக்கள் பயணம் செய்யும்போது அவா்களுக்கு விபத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால் காயம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அத்தகைய இக்கட்டான நேரங்களில் ரயில் பெட்டியில் படுகாயத்துடன் இருக்கும் பயணிகளை எப்படி பத்திரமாக மீட்பது, உயிருக்கு போராடுவோருக்கான முதலுதவி மற்றும் சுவாசக் கருவிகளுடன் காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை தொடா்பாக ரயில்வே ஊழியா்கள் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த விபத்து மீட்பு ஒத்திகை நடத்தப்பட்டது என்றனா்.
இதேபோன்ற விபத்து மீட்பு ஒத்திகை கோவை சா்வதேச விமான நிலையத்திலும் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...