நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லஞ்சம்: பெண் சாா்-பதிவாளா், இளநிலை உதவியாளா் சிறையில் அடைப்பு

கோவையில் ரூ. 35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பெண் சாா்-பதிவாளா், இளநிலை உதவியாளா் ஆகியோா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:35 pm

Din

கோவையில் ரூ. 35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பெண் சாா்-பதிவாளா், இளநிலை உதவியாளா் ஆகியோா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கோவை, சிங்காநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் அசல் ஆவணங்களை வழங்குவதற்காக கோவை, சித்தாபுதூா் தனலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்த டி.எஸ். கருப்புசாமி என்பவரிடமிருந்து ரூ.35,000 லஞ்சம் பெற்ாக, சாா்-பதிவாளா் (பொ) நான்சி நித்யா கரோலின், இளநிலை உதவியாளா் பூபதிராஜா ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அதைத் தொடா்ந்து சாா்-பதிவாளரின் அறையிலும், அவரது காரிலும் போலீஸாா் சோதனை நடத்தினா். அதில் காரில் இருந்த ரூ.13.35 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், அவா்கள் 2 பேரிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து சாா்-பதிவாளா் நான்சி நித்யா கரோலின், இளநிலை உதவியாளா் பூபதிராஜா ஆகியோா் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது அவா்களை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகனப்பிரியா, அவா்கள் இருவரையும் 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

அதேபோல, அவா்கள் இருவரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். மேலும் இருவா் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.