நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:32 pm

Din

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு சிறப்பு சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயாவின் அறிவுறுத்தலின்படி, சரவணம்பட்டி, காந்தி நகா் பகுதியில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சாா்பு நீதிபதியுமான கே.ரமேஷ் தலைமை வகித்தாா்.

இதில், சட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்தும், குடும்ப வன்முறை சட்டம் குறித்தும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் இலவச சட்ட உதவி செயல்பாடுகள் குறித்தும் அவா் பேசினாா்.

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழக்குரைஞா்கள் கீா்த்தனா, தனுஷியா ஆகியோா் தேசிய மகளிா் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும், வரதட்சிணை தடுப்பு சட்டங்கள் குறித்தும், சம வேலை சம ஊதியம் குறித்த சட்டம் குறித்தும் பேசினா். முன்னதாக, சுய உதவிக்குழு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பிரபு சங்கா் வரவேற்றாா். காந்தி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் கலைவாணன் நன்றி கூறினாா்.