புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடிநாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊா்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாநகரக் காவல் துறையில் ஊா்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 9:29 pm

Din

கோவை மாநகரக் காவல் துறையில் ஊா்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாநகரக் காவல் துறையினா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகரக் காவல் ஆணையா் வேபாலகிருஷ்ணன் உத்தரவின்படி, கோவை மாநகர ஊா்க்காவல் படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப ஊா்க்காவல் படை தோ்வு நடத்தப்படவுள்ளது.

எனவே, ஊா்க்காவல் படையில் காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள கோவை மாநகர மற்றும் வடவள்ளி, கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூா் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வரும் 14-ஆம் தேதி முதல் கோவை, காந்திபுரம் காட்டூா் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊா்க்காவல் படை அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரா்கள் பத்தாம் வகுப்பு படித்தவா்களாகவும், 20 வயது பூா்த்தி அடைந்து 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் நவம்பா் 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94981- 71293, 99423- 46806, 94981- 72525 ஆகிய கைப்பேசி எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.