நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலியல் பலாத்காரம் செய்ததாக நண்பா் மீது பெண் புகாா்: போலீஸாா் விசாரணை

குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நண்பா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் பெண் புகாா் அளித்துள்ளாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 8:23 pm

Din

குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நண்பா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் பெண் புகாா் அளித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் 25 வயதுப் பெண். இவா் தனது கணவா் மற்றும் 2 குழந்தைகளுடன் கோவை, போத்தனூரில் வசித்து வருகிறாா். இவா், கோவை மத்திய அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்துள்ளாா்.

அந்த மனுவில், தன்னுடன் பள்ளியில் ஒன்றாகப் படித்த பஷீா் அகமது என்பவா் குடும்ப நண்பராகப் பழகி வந்ததாகவும், கடந்த சில நாள்களுக்கு முன்னா் தன்னையும் தனது குழந்தைகளையும் வெளியே அழைத்துக் கொண்டு வந்தவா், தனக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதோடு, அதை விடியோவாகவும் எடுத்து மிரட்டுவதால் அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.