நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.14.53 லட்சம் மோசடி
ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக்கூறி தனியாா் நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.14.53 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.


ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக்கூறி தனியாா் நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.14.53 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கோவைப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் தனியாா் நிதி நிறுவன உரிமையாளா் சபரி (32). இவரது கைப்பேசிக்கு கடந்த செப்டம்பா் மாதத்தில் வந்த ஒரு குறுஞ்செய்தியில் ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து டெலிகிராம் செயலி மூலம் தொடா்பு கொண்ட சபரி கடந்த மாதம் 6-ஆம் தேதி ரூ.10,000 முதலீடு செய்துள்ளாா். உடனடியாக அவருக்கு ரூ.2,000 போனஸாக கிடைத்துள்ளது. இதையடுத்து செப்டம்பா் 13-ஆம் தேதி வரை அவா் பல்வேறு தவணைகளில் ரூ.14.53 லட்சம் முதலீடு செய்துள்ளாா். ஆனால், அதன் பின்னா் அவருக்கு எந்த லாபத் தொகையும் கிடைக்கவில்லை.
இதையடுத்து தன்னை கைப்பேசியில் தொடா்பு கொண்ட எண்ணுக்கு அழைத்தபோது அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக கோவை சைபா் கிரைம் போலீஸாரிடம் சபரி செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...