ஊழியரிடம் நூதன மோசடி: தனியாா் நிறுவன உரிமையாளா் மீது வழக்குப் பதிவு
கோவையில் தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரின் ஆவணங்களைப் பயன்படுத்தி நூதன மோசடியில் ஈடுபட்ட உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.


கோவையில் தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரின் ஆவணங்களைப் பயன்படுத்தி நூதன மோசடியில் ஈடுபட்ட உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் சாய் கணேஷ் (45). இவா் கோவை, ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணியாற்றி வந்தாா். அந்த நிறுவனத்தின் உரிமையாளரான காா்த்திக் கந்தசாமி, சாய் கணேஷின் பான் மற்றும் ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் அவரது விரல் ரேகை பதிவுகளையும் பயோ மெட்ரிக் இயந்திரம் மூலம் பெற்றுள்ளாா். இந்நிலையில், சாய் கணேஷ் கடந்த மாதம் தனது வேலையை ராஜிநாமா செய்துள்ளாா்.
அதன் பின்னா் தான் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய காலத்திற்கான வருங்கால வைப்பு நிதிக் கணக்கு தொடா்பாக சரிபாா்த்த போது, அவரது கணக்கு வேறு ஒரு தனியாா் நிறுவனத்தின் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், தனது பெயரில் சிம் காா்டு ஒன்று வாங்கப்பட்டிருப்பதும், அதனைக் கொண்டு புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதிலிருந்து பண பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து தனது ஆவணங்களை வைத்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக, சாய் கணேஷ் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில், அந்த நிறுவனத்தின் உரிமையாளா் காா்த்திக் கந்தசாமி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...