நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருணாநிதி நூற்றாண்டு நூலகத்துக்கு நவம்பரில் அடிக்கல்: முதல்வா் பங்கேற்பு

கருணாநிதி நூற்றாண்டு நூலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு நவம்பா் மாதம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:45 pm

Din

கருணாநிதி நூற்றாண்டு நூலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவைக்கு நவம்பா் மாதம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களில் நடைபெற்று வரும் அரசுத் திட்டப் பணிகளை நவம்பா் மாதம் முதல் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

அதன்படி, முதலாவதாக கோவையில் ஆய்வு மேற்கொள்ளும் முதல்வா், காந்திபுரத்தில் 6.09 ஏக்கா் பரப்பளவில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அப்பணிக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, விளாங்குறிச்சி பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 2-ஆவது ஐ.டி.பூங்கா வளாகத்தை முதல்வா் திறந்துவைப்பதுடன், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.